1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (11:39 IST)

மாணவர் ஆதித்யா மன உளைச்சலில் இறக்கவில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்

மாணவர் ஆதித்யா மன உளைச்சலில் இறக்கவில்லை
நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் முருகேசன் ஆகிய மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயம் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர் 
 
இந்த நிலையில் தர்மபுரி தர்மபுரி மாணவர் ஆதித்யாவின் உடலை அவரது பெற்றோர்கள் வழங்க மறுத்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே தங்களுடைய மகனின் உடலை வாங்குவோம் என அவரது பெற்றோர்கள் போராட்டம் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன 
 
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்கள் இது குறித்து பேட்டியளித்த போது தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஆதித்யா நன்றாக படிக்கக் கூடியவர் என்றும் மன உளைச்சலில் அவர் இறக்கவில்லை என அவரது பெற்றோர் கூறுகின்றனர் என்றும் தெரிவித்தார். அப்படியானால் ஆதித்யாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகிறோம் என்று என மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது