திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 ஜூன் 2018 (22:25 IST)

மதிமுகவில் மீண்டும் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்?

திமுக, மதிமுக, அதிமுக, தினகரன் அணி என மாறி மாறி கட்சிகள் தாவி அரசியல் செய்து வந்த நாஞ்சில் சம்பத் மீண்டும் மதிமுகவிற்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டிடிவி தினகரன் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்ததால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத் இனிமேல் தன்னுடைய வாழ்வில் அரசியல் இல்லை என்றும் இனிமேல் தமிழுக்கு மட்டுமே தொண்டு செய்யவுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் அவர் தற்போது ஆர்ஜே பாலாஜி நடிக்கும் 'எல்.கே.ஜி' என்ற படத்தில் ஆர் ஜே பாலாஜியின் தந்தையாக நடிக்கவுள்ளார்
 
இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் மதிமுகவில் இணையவுள்ளதாக ஃபேஸ்புக்கில் ஒருசிலர் பதிவு செய்து வருகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்