1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Namitha not interest to support campaign for ttv dinakaran

அதெல்லாம் வரமுடியாது! தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மறுத்த நமீதா

namitha
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டிகை நமிதா மற்றும் நடிகை விஜயசாந்தி பிரச்சாரம் செய்ய மறுத்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



 


ஆர் கே நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் கடந்த சிலநாட்களாக சசிகலா அணியின் வேட்பாளாரான டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் 'கவனிப்பு' நன்றாக இருப்பதால் தினகரனுக்கு மட்டும் மக்கள் எதிர்ப்பு இல்லை.

ஆனால் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பிரபலங்களுக்கு கிட்டத்தட்ட அடி,உதை விழாத குறைதான். சமீபத்தில் சி.ஆர்.சரஸ்வதிக்கு கிடைத்த மரியாதை அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு நடிகை நமீதாவுக்கு தினகரன் தரப்பினர் அழைப்பு விடுத்ததாகவும், இதற்காக வெயிட்டான ஒரு தொகை தருவதாகவும் வலை வீசினர். ஆனால் நமிதா 'அதெல்லாம் வரமுடியாது' என மறுத்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலாவுக்கு ஆதரவு அளித்த நடிகை விஜயசாந்தியும் பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
செல்போன் சார்ஜில் இருக்கும்போதே ஹெட்போனில் பாட்டு கேட்ட வாலிபர் பலி