1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (23:48 IST)

தெரியாம செஞ்சிட்டேன். தேர்தல் கமிஷனிடம் கூறிய தினகரன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டு அணிகளாக உடைந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆயினும் தினகரன் அணியின் சமூக வலைத்தளத்திலும் மதுசூதனனின் சின்னமான இரட்டை மின் கம்பம் சின்னத்திலும் இரட்டை இலை பயன்படுத்தப்படுவதாக மாறி மாறி புகார் செய்யப்பட்டது.



 


இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தவறுதலாக இரட்டை இலை சின்னம் இடம்பெற்று விட்டதாகவும், தற்போது அது அகற்றப்பட்டுவிட்டதாகவும் தினகரன் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இடைத்தேர்தலை தடுக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்றும் எங்கள் தரப்பில் யாரும் பணப்பட்டுவாடா செய்யவில்லை என்றும் எங்கள் பெயரில் வேறு யாரோ பணம் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆர்.கே.நகர் தேர்தலின் வெற்றிக்கு பின்னர் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற உள்ளதாகவும், அடுத்த தேர்தலில் இதே ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்