புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (09:57 IST)

பள்ளி திறந்த இரண்டே நாளில் மாணவிக்கு கொரோனா? – நாமக்கலில் அதிர்ச்சி!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதலாக பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா உறுதியான மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.