திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 3 ஜூன் 2018 (16:03 IST)

லொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்

திமுக நடத்திய போட்டி சட்டசபையில் கலந்துக்கொண்ட கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரை நமது அம்மா நாளிதழில் விமர்சித்து செய்தி வெளியாகியுள்ளது.

 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாயலத்தில் போட்டி சட்டசபை நடைபெற்றது. இதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துக்கொண்டனர். போட்டி சட்டசபையில் கருணாஸ் சபாநாயகர் மீது குற்றச்சாட்டு வைத்தார். 
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக போட்டி சட்டமன்றத்தில் கலந்துக்கொண்டவர்களை விமர்சித்து நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. லொடுக்குப் பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
 
திமுக நடத்திய கோமாளி மாதிரி சட்டமன்றத்துக்கு சென்று பஃபூன் வேஷம் கட்டியிருக்கிறார்கள். பன்றியைக் குளிப்பாட்டி பட்டுத் துணி கட்டிவிட்டாலும் அது கழிவு நீர் குட்டையை நோக்கித்தான் ஓடும் என்பதையே உறுதி செய்திருக்கிறது.
 
இதுபோன்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.