1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nallathambi who complained rajendra balaji arrested

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் வேறொரு புகாரில் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய் நல்ல தம்பியை கைது செய்யப்பட்டுள்ளார் 
 
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி மீது ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் 
 
தலைமறைவாக இருந்த விஜய நல்ல தம்பியை கோவில்பட்டி அருகே போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
நாளை முதல் 16,709 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை அறிவிப்பு