1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (00:06 IST)

4 பெண்கள் உள்பட 60 க்கும் மேற்பட்ட பாஜக வினர் கைது

கரூரில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட 4 பெண்கள் உள்பட 60 க்கும் மேற்பட்ட பாஜக வினர் கைது செய்யப்பட்ட நிலையில் மதிய உணவு உண்ணாமல் கைது செய்யப்பட்ட போதும் தொடர் ஆர்பாட்டம்.
 
பஞ்சாப் மாநிலத்தில் நரேந்திர மோடி 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்க சமீபத்தில் சென்ற போது,   விவசாயிகள் என்கின்ற பெயரில் அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் போலி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாரத பிரதமர் மோடி சாலை வழியாக செல்ல முடியாமல் திரும்பிச் சென்றார். இதைக் கண்டித்தும் கரூர் மாவட்ட பாஜக வின் பட்டியல் அணி சார்பில்  திண்ணப்பா தியேட்டர் எதிர்பறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் 100 க்கும் அதிகமான பாஜகவினர் திரண்ட நிலையில், அதே பகுதிக்கு வந்த போலீசார்.  திண்ணப்பா தியேட்டர் அருகில் ஆர்பாட்டம், போராடரடம் நடத்த அனுமதியில்லை. எனவே போராட்டம் நடத்தக் கூடாது என தெரிவித்து எச்சரித்தனர்.  போலீசாரின் எச்சரிக்கையும் மீறி,  தடையை மீறியும்,  கரூர் மாவட்ட தலைவர் பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் 100 க்கும் அதிகமான  பாஜகவினர் பஞ்சாப் அரசையும்,  காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் முழக்கம் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில்  ஈடுபட்ட 60 க்கும் மேற்பட்ட பாஜகவினரை குண்டு கட்டாக தூக்கி காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். 4 பெண்கள் உள்பட 60 பாஜக பிரமுகர்களை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்த போது, கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் பாஜக பிரமுகர்களை தாக்கியதாகவும், நாகரீகமற்ற முறைகளை கையாண்டதாக கூறி, திடீரென்று பாஜக வினர் கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூர்பாண்டியனையும், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் கண்டித்து முழுக்கங்கள் எழுப்பபட்டது. இந்நிலையில், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூர்பாண்டியனை சஸ்பெண்ட் செய்யுமாறும், அதுவரை சாப்பிட மாட்டோம் என்று கூறி, கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டிருந்த பாஜக வினர் தொடர் முழக்கமாக ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.