1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nalini and murugan couples continues their hunger strike

நளினி, முருகன் தம்பதி சிறையில் தொடர் உண்ணாவிரதம் – இறங்கி வருவாரா ஆளுநர் ?

எழுவர் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் நளினி முருகன் தம்பதிய்னர் சிறையில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் சம்மந்தப்பட்ட வழக்கு 27 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் ஏழு பேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு வெளியிட்டது. அதை அடுத்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆளுநர் அதுகுறித்த எந்த பதிலும் அளிக்காமல் அந்த சட்டம் அப்படியே கிடப்பில் உள்ளது.

அமைதியாக இருக்கும் ஆளுநருக்கு அழுத்தம் அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் பல்வேறு வகையானப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் ஆளுநரை நேரில் சந்தித்து தனது மகன் உள்ளிட்ட ஏழுபேரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெ எனக் கோரிக்கை வைத்தார். ஆனாலும் மத்திய அரசும் ஆளுநரும் மக்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் கள்ளமௌனம் காத்து வருகின்றனர்.

இதையடுத்து தங்களது விடுதலை தொடர்பான ஆவணத்தில் தமிழக ஆளுநர் காலம் கடத்துவதாகக் கூறி, வேலூர் ஆண்கள் சிறையில் உள்ள முருகன் 6-வது நாளாகவும், பெண்கள் சிறையில் உள்ள நளினி 4-வது நாளாகவும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தொடர் உண்ணாவிரதம் காரணமாக தொடர் உண்னாவிரதத்தால் அவர்களின் உடல் சோர்வடைந்துள்ளதாக சிறை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிறை விதிகளை மீறி இருவரும் உண்னாவிரதம் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் சிறைத்துறை அளித்துள்ள சலுகைகள் யாவும் திரும்பப்பெறப் படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. ஆனால் ஆளுநர் பதில் அளிக்கும் வரையில் இருவரும் போராட்டத்தைத் தொடரப்போவதாக தெரிவித்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதையடுத்து எழுவரின் விடுதலையை உடனடியாக அறிவித்து ஆளுநர் பதிலளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இறங்கி வருவாரா ஆளுநர் ?
அடுத்த கட்டுரையில்
எக்ஸ்ட்ரா கொய்யா கேட்ட வாலிபர்: ஓட ஓட வெட்டிய பார் ஊழியர்