புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 20 ஜனவரி 2019 (07:20 IST)

அதிமுக ஆட்சி தொடர்வதை அமைச்சர் ஜெயகுமாரே விரும்பவில்லை: துரைமுருகன்

அதிமுக ஆட்சி தொடர்வதை திமுக எம்.எல்.ஏக்களே விரும்புகின்றனர் என்று சமீபத்தில் மீன்வளத்துறை அமைச்சர் பேட்டி ஒன்றில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் இதற்கு விளக்கமளித்த அமைச்சர், திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை காப்பாற்றி கொள்ள அதிமுக ஆட்சி தொடர்வதை விரும்பினர் என்ற அர்த்தத்தில் கூறியதாக கூறினார்.

இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டை சேர்ந்த  அ.தி.மு.க. முன்னாள் மாமன்ற உறுப்பினர் நித்தியகுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன், 'அதிமுக ஆட்சி தொடர்வதை அமைச்சர் ஜெயகுமாரே விரும்பவில்லை என்பது தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

தற்போது அமைச்சர் ஜெயகுமார் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்காப்பட்டுள்ளதாகவும், இதனால் மிகுந்த மனவருத்தத்தில் உள்ள ஜெயகுமார் இந்த ஆட்சி எப்போது போகும் என்று நினைப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.