செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (10:50 IST)

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்பது அவசியம்: நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை அவசியம் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஒற்றை தலைமையை கைப்பற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார் என்பதும் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் ஆதரவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூடுவது சம்பந்தமான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை அவசியம் என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் நடக்கும் சர்ச்சைகள் குறித்து பாஜக கருத்து தெரிவிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது