1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS supporters transfer thie support to edappadi palanisamy

எடப்பாடியாருக்கே எங்கள் ஆதரவு..! – ஓபிஎஸ்-ஐ வாரிவிட்ட ஆதரவாளர்கள்!

EPS OPS
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடியாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி அணி கூறி வரும் நிலையில், ஒற்றைத் தலைமை தேவையில்லை என ஓபிஎஸ் அணியினர் மறுத்து வருகின்றனர். மேலும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் அணி கூறி வருகின்றது.

ஆனால் எடப்பாடியார் அணியோ பொதுக்குழு எடுக்கும் முடிவுதான் ஒற்றைத் தலைமையை தீர்மானிக்கும் என கூறி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடிக்கு ஆதரவாக திசை திரும்பி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் மற்றும் அவரின் சொந்த மாவட்டமான தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தின் 9 நிர்வாகிகளும் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஓபிஎஸ் அணி அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. 23ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
மொத்த தமிழ்நாட்டிலேயே தமிழில் நூற்றுக்கு நூறு! – சாதனை படைத்த மாணவி!