திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (17:27 IST)

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ops eps
அதிமுக பொதுக்குழு விரைவில் கூட இருக்கும் நிலையில் இந்த பொது குழுவுக்கு தடை கோரிய பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பொதுக்குழு கூடி அது குறித்து முடிவு எடுக்க உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஓபிஎஸ் இபிஎஸ் பதிலளிக்க வேண்டும் என்று உரிமையியல்  நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.