புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (07:16 IST)

நடுவழியில் இறக்கிவிடப்பட்ட நரிக்குறவர்கள்: பேருந்து ஓட்டுனர், நடத்துனர் சஸ்பெண்ட்!

நடுவழியில் இறக்கிவிடப்பட்ட நரிக்குறவர்கள்: பேருந்து ஓட்டுனர், நடத்துனர் சஸ்பெண்ட்!
பேருந்திலிருந்து நடுவழியில் நரிக்குறவர்கள் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் மீனவ பெண் ஒருவர் வைத்திருந்த கூடையில் நாற்றம் வருவதாக கூறி நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வரை சென்றதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீனவப் பெண்ணை பேருந்தில் ஏற்றாத நடத்துனர் மற்றும் ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாகர்கோவிலில் அரசு பேருந்தில் இருந்து நடுவழியில் நரிக்குறவர்கள் சிலர் இறக்கிவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி வெளியான சில மணி நேரத்தில் அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தமிழக அரசு அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது