1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Karur science teacher suspended

ஆபாசமாக அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்ட்!

அறிவியல்
மாணவ மாணவிகளுக்கு ஆபாசமாக அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள் மீது மாணவ மாணவிகள் பாலியல் புகார் கூறும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன என்பதும் இது குறித்து தமிழக அரசின் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பகநத்தம் என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் என்பவர் அறிவியல் பாடத்தை ஆபாசமாக நடத்தியதாக தெரிகிறது
 
இது குறித்து மாணவ மாணவிகள் புகார் அளித்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் புகாரின்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
 
 
அடுத்த கட்டுரையில்
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா; ஒமிக்ரான் பாதிப்பா? – தீவிர பரிசோதனை!