1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nagai fishermen released from srilanka jail

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் விடுதலை!

இலங்கை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பதும் அவர்கள் கடந்த சில நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கடந்த அக்டோபர் 31ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் விடுதலை செய்யப்பட்ட 23 மீனவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யாவா? காயத்ரி ரகுராம் கேள்வி!