செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (15:26 IST)

நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை எப்போது??

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை வரும் 15 ஆம் தேதி எண்ண முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எபாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷின் சங்கரதாஸ் அணியினரும் போடியிட்டனர். முன்னதாக நடிகர் சங்க தேர்தல் நடத்துவதில் பல குளறுபடிகள் இருப்பதால், பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என்று மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.

அதன் பிறகு நீதிமன்றம், ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் நடத்த மட்டும் அனுமதி அளித்தது. ஆனால் வாக்குகளை எண்ண அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை வரும் 15 ஆம் தேதி எண்ண முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.