1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Supreme court rejects Inbadurai petition

ராதாபுரம் எம்.எல்.ஏவின் மனுவை விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்..

உச்ச நீதிமன்றம்
ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுகவின் அப்பாவு தொடுத்த வழக்கில், இன்பதுரை அளித்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டார் இன்பதுரை. அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.  இதனை தொடர்ந்து 203 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகரிகள் நிராகரித்ததாக  அப்பாவு வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில்  மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு தேர்தல் அணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், 19,20,21 ஆகிய சுற்றுகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அக்டோபர் 4 ஆம் தேதிக்குள்  சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை சென்னை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதார். இந்நிலையில், எம்.எல்.ஏ. இன்பதுரை அளித்த மேல் முறையீடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நீதிமன்ற தீர்ப்புக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் மின்னணு இயந்திரங்களை  சமர்மிப்பது கடினம் என்றும் பதிலளித்தது. அந்த பதிலுக்கு விளக்கம் கேட்கும் வகையில், மின்னணு இயந்திரங்கள் வட மாநிலத்திலிருந்து வருகிறதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கு அதிமுகவினர் எதிர்கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
ஏர்போர்ட் டூ மாமல்லபுரம்: அதிமுக சார்பில் பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதி!