வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (11:12 IST)

நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமானது – நெகிழச்செய்யும் புகைப்படம் !

நாம் தமிழர் கட்சி சார்பில் கால்நடைகளுக்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள் குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டு மழைகள் குவிந்து வருகின்றன.

சென்னைப் போன்ற பெருநகரங்களில் மக்களுக்கேக் குடிக்க இலவசமாக குடிநீர் கிடைப்பது சிரமமாக உள்ளது. கோடைக்காலங்களில் அரசியல் கட்சிகள் வைக்கும் தண்ணீர் பந்தல்களே ஒரே ஆறுதல். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் கால்நடைகளுக்கு சொல்ல வேண்டுமா?

ஆனால் கால்நடைகளின் தாகத்தை தீர்க்க நாம் தமிழர் கட்சியினர் ஒரு சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளனர்.  நகரங்களின் சில பகுதிகளில் கால்நடைகள் குடிக்கும் வண்ணம் தண்ணீர் தொட்டிகளை வைத்துள்ளனர். அதில் நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமானது என எழுதப்பட்டுள்ளது. அதில் கால்நடைகள் வந்து தண்ணீர் குடித்து தாகம் தீர்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

அடையாள தண்ணீர் பந்தலாக இல்லாமல் இது  நிரந்தரமாக தொடரவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் இந்த முன்னெடுப்பு முக்கியமானது என பலரும் தங்கள் கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.