மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழரும் முக்கியக் கட்சிகளாக வரும் – இயக்குனர் கணிப்பு !

Last Modified வெள்ளி, 24 மே 2019 (11:56 IST)
நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட சதவீதத்தில் வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் முக்கியக் கட்சிகளாக உருவாகும் என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் தமிழகத்தில் அதற்குத் தலைகீழாக பாஜகவால் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. 5 தொகுதிகளில் ஸ்டார் வேட்பாளர்களை நிறுத்தியும் பாஜக வால் ஒருத் தொகுதியைக் கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜக கூட்டணியில் அதிமுக மட்டுமே ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 39 தொகுதிகளில் 38 தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.

தனித்து போட்டியிட்ட மற்ற கட்சிகளான  அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் எந்தவொரு தொகுதியிலும் முன்னிலைப் பெறவில்லை. ஆனால் நாம் தமிழர் மற்றும் ம.நீ.ம ஆகியக் கட்சிகள் மூன்றாம் இடத்தைப் பல இடங்களில் கைப்பற்றியுள்ளனர். நகர்ப்புறங்களில் ம.நீ.ம. மும் கிராமப்புறங்களில் நாம் தமிழரும் குறிப்பிடும் படியான வாக்குகளைப் பெற்றுள்ளனர். இந்த இருக் கட்சிகளும் சேர்ந்து சுமார் 36 லட்சம் வாக்குகளைக் கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து இயக்குனர் சேரன் இந்த இருக் கட்சிகளுக்கும் மக்கள் ஆதரவு உருவாகி வருகிறது. எனவே இரு பெரும் கட்சிகளாக இவை உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :