வெள்ளையாக இருப்பதால் கமலை நம்பிவிட்டார்கள் – சீமான் ஆவேசம் !
தேர்தலுக்குப் பின்னர் தேர்தலில் கமலின் பங்களுப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.
17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 38 இடங்களில் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் மற்றும் ம.நீ.ம ஆகியக் கட்சிகள் மூன்றாம் இடத்தைப் பல இடங்களில் கைப்பற்றியுள்ளனர். இந்த இருக் கட்சிகளும் சேர்ந்து மொத்தமாக 36 லட்சம் வாக்குகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இதுபற்றி சீமான் ஆன்ந்த விகடன் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கமலின் வளர்ச்சி குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பியபோது ‘கமலின் பங்களிப்பு என தேர்தலில் எதுவும் இல்லை . அவர் 50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். அதனால் அவர் ஒரு பர்னாசிலிட்டியாக பார்க்கப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் வெள்ளையாக இருப்பதால் மக்கள் அவர் பொய் சொல்லமாட்டார் என நம்பி வாக்களித்திருக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் இதே மாதிரி தோல்வி வந்தால் அவர் தாங்குவாரா எனத் தெரியவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.