1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Iran Warns Israel: "Only 5% of Our Attack is Done, the Real Offensive is Yet to Come!"

இது வெறும் டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேல் தான்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை..!

iran missile attack
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், "தற்போது நாங்கள் தாக்கியது வெறும் 5% மட்டுமே, இனிமேல்தான் மொத்த தாக்குதலும் இருக்கிறது," என்று ஈரான், இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதலுக்கு பதிலடியாக, "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் ஈரான் நடத்திய தாக்குதல், இஸ்ரேல் நாட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஈரான் காவல் படையின் மூத்த தளபதி செய்தியாளர்களிடம் பேசும்போது, "தற்போதைய தாக்குதல் வெறும் 5% மட்டுமே. எங்களின் அனைத்து ஆயுதங்களையும் நாங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை. கடற்படை மற்றும் எங்கள் முழு படையை பயன்படுத்தினால், இஸ்ரேலின் அழிவு மோசமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
 
போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டால், அது இஸ்ரேலின் மறுசீரமைப்புக்கு உதவும் என்றும், இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஈரான் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
முன்னதாக, "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் இஸ்ரேல், ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு தற்போதுதான் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே.. முதல்வர் மருந்தகம் குறித்து அண்ணாமலை..!