செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:00 IST)

என்னை விட அதிக வாக்குகள் பாஜகவால் வாங்க முடியுமா? சீமான் சவால்..!

வரும் பாராளுமன்ற தேர்தலில் என்னைவிட அதிக வாக்குகளை பாஜக வாங்க முடியுமா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விட்டு உள்ளார்.
 
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. 
 
அந்த வகையில் கரூர் மற்றும் ஈரோடு ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளரையும் நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நிற்க பாஜகவுக்கு ஆள் இருக்கின்றதா என்று அவர் கேள்வி எழுப்பினார். 
 
பத்து ஆண்டுகள் ஆட்சியில் உள்ள பாஜக என்னை எதிர்த்து போட்டியிட்டு ஒரு சதவீத வாக்கு அதிகம் பெற முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
சீமானின் கேள்விக்கு பாஜக தரப்பில் என்ன பதில் அளிக்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva