2024 நாடாளுமன்றத் தேர்தல்.. முதல் வேட்பாளரை அறிவித்த சீமான்
2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2024 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் பாராளுமன்றத்தில் தொகுதியில் கருப்பையா என்பவர் போட்டியிடுவார் என்றும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் சீமான் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு இந்த ஆண்டு அவர் வேட்பாளர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்தடுத்து அவர் மற்ற தொகுதிகளின் வேட்பாளர் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் நானே அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva