வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (10:57 IST)

கரூரை அடுத்து ஈரோடு வேட்பாளரை அறிவித்த சீமான்.. பெண் வேட்பாளர் அறிவிப்பு..!

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன
 
ஏற்கனவே தான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாக சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று கரூரில் நடந்த கூட்டத்தில் கரூர் தொகுதியின் பாராளுமன்ற வேட்பாளரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.  
 
தேர்தல் அறிவிப்புகள் வரும் முன்பே வேட்பாளரை சீமான் அறிவித்த பரபரப்பு நீங்கும் முன்பே ன்று மீண்டும் ஈரோடு தொகுதியின் வேட்பாளரை அவர் அறிவித்துள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு  தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி என்று அறிவித்துள்ளார். 
 
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் இதை அறிவித்துள்ள நிலையில் ஈரோடு தொகுதி நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran