சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நாடகம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்
சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நாடகம் என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கடும் விமர்சனம் செய்துள்ளது.
நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வீட்டு சிலிண்டர் ரூபாய் 200 குறைக்கப்படும் என ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் இன்று முதல் சென்னையில் சிலிண்டர் விலை ரூபாய் 918.50 என விற்பனை ஆகி வருகிறது.
இந்த நிலையில் சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நாடகம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா கடும் விமர்சனம் செய்துள்ளார். எங்கள் ஆட்சியில் சிலிண்டர் விலை 400 ஆக இருந்தது. ஆனால் இன்று ரூ.1150 ஆக உள்ளது. சிலிண்டர் விலையை 500 அல்லது 700 வரை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
அதே போல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகாஜூர்னே கார்கே இதுகுறித்து கூறியபோது, வாக்குகள் குறையும்போது தேர்தல் பரிசுகள் அறிவிக்கப்படும் என்றும் அதன் அந்த வகையில் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பாஜகவின் தேர்தல் நாடகம் என்றும் கூறியுள்ளார்.
Edited by Siva