1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mutharasan says about EPS assistant arrest

எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி
பண மோசடி வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் இன்று காலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
 
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த  வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரணை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார் 
 
இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் மேல் திமுக அரசு பொய்யான வழக்குகளை பதிவு செய்து வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இயற்கையை பாதுகாக்கும் தூத்துக்குடி மக்கள்! – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!