ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified வியாழன், 19 ஜனவரி 2023 (15:21 IST)

மும்பை - கோவா சாலையில் கோர விபத்து: 9 பேர் பலி

maharashtra
மஹாராஷ்டிர  மாநிலம்  நெடுஞ்சாலையில் லாரியும் வேனும்  மோதியது. இதில், 9 பேர் பலியாகினர்.
 

கோவா- மும்பை  நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு  ஒரு கார் மும்பையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரத்னகிரி மாவட்டம் குவாஹர் என்ற பகுதியில் வரும்போது, எதிரே வந்த  லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்தக் கோர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை 3 பெண்கள்  உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பனிமூட்டத்தால் விபத்து ஏற்பட்டதா? அல்லது டிரைவர்கள் தூக்க கலக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டதா ? என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.