குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்கிறேன்- நடிகை ஹன்சிகா
குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்வதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணிகையாக வம் வந்தவர் நடிகை ஹன்சிகா. இவர், விஜய்யுன் வேலாயுதம், புலி, மான் கராத்தே, வாலு, குலேபகாவலி,, சிங்கம், ஆம்பள, போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து வந்ததை அடுத்து அவர் கடந்தாண்டு டிசம்பர் 4 ஆம் தேதி அவரது குடும்ப நண்பரும், தொழிலதிபருமான சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணம் செய்து கொள்ளும் முன்பே ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்டு வளர்த்து வந்த நிலையில்,சமீபத்தில் ஹன்சிகா அளித்த பேட்டியில், 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்..