1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified புதன், 11 ஜனவரி 2023 (17:31 IST)

அம்பானியின் சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ambani
நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா காம்பளக்ஸில் அம்பானி  இண்டர் நேசனல் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில், அங்குள்ள தொழிலதிபர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை 4:30 மணியளவில் பள்ளியில் தொலைபேசி எண்ணிற்கு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் இப்பள்ளிக்கு மோப்ப நாய்களுடன் சென்று சோதனையில் ஈடுப்பட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாக மும்பை போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.