புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (20:56 IST)

வெள்ள பாதிப்புக்கு ஆந்திர அரசே காரணம்: அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு!

வெள்ள பாதிப்புக்கு ஆந்திர அரசே காரணம்: அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு!
வெள்ளை பாதிப்புக்கு ஆந்திர அரசின் செயல்பாடுகளே காரணம் என அமைச்சர் நாசர் குற்றம்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுக்க காரணம் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்தேக்கத்தில் இருந்து உரிய அறிவிப்பின்றி திடீரென 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டதே என்று அமைச்சர் நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
திடீரென 20 ஆயிரம் கன அடி உபரிநீர் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து திறக்கப்பட்டதால் ஆரணி ஆற்றின் கரை உடைந்து பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால் 20 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார் அவருடைய இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது