ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் என்ற பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தண்ணீரை குடித்துவிட்டு காலி பாட்டிலை வெளியே வீசி உள்ளார்.
அப்போது ரயில் பாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவனின் மார்பில் தண்ணீர் பாட்டில் பட்ட நிலையில் அந்த சிறுவன் குலைந்து கீழே விழுந்தார். இதனை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அந்த சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது அதிர்ச்சி அடைந்துள்ளது.
பாட்டிலால் ஏற்பட்ட காயம் பெரிதில்லை என்றாலும் அந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பு தான் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அலட்சியமாக தண்ணீர் பாட்டிலை வெளியே வீசிய பயணி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Edited by Mahendran