1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (10:34 IST)

பல மாதங்களுக்கு பிறகு முதுமலை காப்பகம் திறப்பு! – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா தளங்கள், சரணாலயங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது வழங்கப்பட்டு வரும் தளர்வுகளால் சுற்றுலா தளங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முதுமலை புலிகள் காப்பகம் பார்வையாளர்களுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ம் தேதி முதல் பயணிகளுக்கான யானை சவாரி தொடங்கப்படுவதுடன், தங்கும் விடுதிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வருகையை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.