1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mud smuggling case filed on KC Veeramani

மணல் கடத்தல் - பாயும் வழக்குகலால் நெருக்கடியில் வீரமணி

மணல் கடத்தல்
சொத்து குவிப்பு வழக்கோடு மணல் கடத்தல் வழக்கும் பாய்வதால் கே.சி.வீரமணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். கே.சி.வீரமணி வீடுகளில் இருந்து பணம், நகை, கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 551 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
கே.சி.வீரமணி அமைச்சராக இருந்தபோது அவரது பெயரிலும், பினாமிகள் பெயரிலும் 23 லாரிகளில் பாலாற்றில் இருந்து  இரவு, பகலாக மணல் கடத்தி விற்பனை செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கும் கடத்தல் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கோடு மணல் கடத்தல் வழக்கும் பாய்வதால் கே.சி.வீரமணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash