மீன் வாங்கலையோ மீன்.. இது புரட்டாசிடா அம்பி! – காத்து வாங்கும் இறைச்சி கடைகள்!
புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனை குறைந்துள்ளது.
தமிழகத்தில் புரட்டாசி மாதத்தில் பெரும்பான்மையான மக்கள் இறைச்சி உண்ணாமல் சைவ உணவுகளையே உண்ணும் விரதத்தை கடைபிடிக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புரட்டாசி முதல் நாள் தொடங்கியது முதலாக இறைச்சி, மீன் விற்பனை குறைந்துள்ளது.
பல மீன் சந்தைகளில் மீன் வரத்து குறைந்துள்ள நிலையில் கையிருப்பில் இருக்கும் மீன்களையும் குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர். எனினும் பெரும்பான்மை மக்கள் இறைச்சி தவிர்த்துள்ளதால் விற்பனை மந்தமாகியுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆடு, கோழி இறைச்சி விலையும் இதனால் சரிந்துள்ளது.