தொடர்புடைய செய்திகள்
- ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: '100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா?'
- அவனை ஒண்ணும் செஞ்சிடாதீங்க...குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநரின் தாயார் கெஞ்சல் !
- பாலியல் வல்லுறவு, கொலை: பெண் கால்நடை மருத்துவரின் கடைசி உரையாடல்
- கொடூர சைக்கோக்களும் வேட்டையாடப்பட வேண்டும் - நடிகை கீர்த்தி சுரேஷ்
- பிரியங்கா ரெட்டியை கொலை செய்தது எப்படி? குற்றவாளி அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்!
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை பறிப்பு தண்டனை: எம்பிக்கள் ஆவேச பேச்சு
தெலுங்கானா மாநிலத்தில் பிரியங்கா ரெட்டி, தமிழ்நாட்டில் ரோஜா உள்பட பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திமுக எம்பி வில்சன் இதுகுறித்து கூறிய போது, பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை பறிப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். கொரியா, கலிஃபோர்னியா, அமெரிக்கா, அலபாமா போன்ற நாடுகளில் செய்வது போல் பாலியல் வன்கொடுமை குற்றம் புரிபவர்களுக்கு ஆண்மை பறிப்பு செய்ய வேண்டும். அதற்காக ஆகும் செலவை அவர்களின் சொத்துக்களை முடக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் இதுகுறித்து கூறியபோது, ‘பாலியல் குற்றம் புரிந்தவர்களை பொதுவெளியில் நிற்கவைத்து கொல்ல வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார்.
அதிமுக எம்பி விஜிலா சத்தியானந்த் இதுகுறித்து கூறியபோது, ‘நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பிரியங்கா ரெட்டி குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரையும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும். தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்
