செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 9 ஜூலை 2020 (21:17 IST)

ஒரே மகள் திருமணம் முடிந்ததால் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு

ஒரே மகள் திருமணமாகி தன்னைப் பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த தாய் எடுத்த அதிர்ச்சி முடிவால் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தென்காசி மாவட்டம் கடையம் என்ற பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி செல்வகுமாரி. இவர்களது ஒரே மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. தனது ஒரே மகள் தன்னை விட்டுப் பிரிந்து விட்டதாக கடந்த சில நாட்களாக கணவரிடம் செல்வகுமார் புலம்பி உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் ரத்த அழுத்தம் உட்பட ஒரு சில நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் 
 
இந்த நிலையில் திருமணமாகி மகள் பிரிந்த வேதனையை தாங்கமுடியாத அவர் இன்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடையம் போலீசார் செல்வகுமாரி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே மகள் பிரிவை தாங்க முடியாமல் தாய் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது