வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2020 (14:57 IST)

Tik Tok தாய் நிறுவனத்திற்கு ரூ. 45, 000 கோடி நஷ்டம் ! ஊழியர்கள் கண்ணீர்

கடந்த சில வாரங்களாக இந்திய சீனா எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே எழுந்து வரும் பிரச்சனையை உலக நாடுகளே உற்றுக் கவனித்து வருகின்றன. அமெரிக்காவுவும் சீனாவிம் அத்துமீறலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கொரொனா காலத்தில் இந்தியா உலகநாடுகளுக்கு உயிரைக் காப்பாற்றும் மருத்துகளை சப்ளை செய்து வருவதுடன் துணிந்து கொரொனாவை எதிர் கொண்டு வரும் நிலையில், சீனாவின் அத்துமீறலை பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

அதேசமயம், சீனா நாட்டைச் சேர்ந்த டிக்டாக், ஹலோ, ஷேர் ஷாட், பைட் டேன்ஸ் போன்ற 50க்கும் மேற்பட்டமொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இந்திய ரகசியங்கள் சீனா ராணுவத்திற்குச் செல்கிறது என்ற குற்றச்சாட்டும் பொதுவாக முன் வைக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவில் அந்த நாட்டின் செயலிகளை தடை செய்யக் காரணம் எனக் கூறப்பட்டது.

 இதனால்,  டிக் டாக்கின்  தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு  ரூ.45 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகிறது.

சுமார்  20 கோடி இந்தியர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில் இந்தத் தடையால் 20 கோடி பயனாளர்களை ஒட்டுமொத்தமாக இழந்துள்ளது. எனவே டிக் டாக் , பைட் டேன்ஸ் போன்ற செயலிகளை நம்பி இருந்து தற்போது வாழ்வாரத்தை இழ்ந்துள்ளோரின் நலத்தைக் கருத்தில் கொண்டு மீண்டு செயல்பட அனுமதிக்க வேண்டும் என சீனா ஆப்களின் நிறுவனங்கள் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருவாதாக செய்திகள் வெளியாகிறது.