வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (16:06 IST)

அமேசான் காலை வாரிய பொன்மகள் வந்தாள் & பென்குயின்?

பொன்மகள் வந்தாள் மற்றும் பென்குயின் திரைப்படங்களால் அமேசானுக்கு பெரிய லாபம் இல்லை என தகவல். 
 
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது மட்டுமின்றி திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. 
 
இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் சிக்கலில் உள்ளன. இருப்பினும் ஒரு சில படங்கள் அதாவது பொன்மகள் வந்தாள் பெண்குயின் போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீசாகி ஓரளவு வரவேற்பையும் வசூலையும் பெற்றன என்பது குறிப்பிடதக்கது. 
 
இதில் பொன்மகள் வந்தாள் படத்தால் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு இரண்டு முதல் மூன்று கோடி வரை லாபம் கிடைத்ததாகவும் பெண்குயின் படத்தால் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு கோடின்வரை லாபம் கிடைத்ததாகவும் சொல்லப்பட்டாலும் அமேசானை பொறுத்தவரை இந்த படங்களால் லாபம் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.