தொடர்புடைய செய்திகள்
- இரு குழந்தைகளை தீக்குக் இரையாக்கிய தாய்… கடைசியில் தானும்! – குடும்ப பிரச்சனையால் பலியான 3 உயிர்கள்!
- பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்! – குமரியில் அதிர்ச்சி சம்பவம்!
- சுஷாந்த் சிங்கோடு தாய்லாந்தில் டேட்டிங்!? - சாரா அலி கான் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!
- மனைவியோடு சண்டை… அதற்கு கணவன் செய்த செயல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை; தனிநபர் விரோதத்தால் வெறிசெயல்!
நான்காவது திருமணம் செய்துகொள்ள ஆசை… அதற்கு குறுக்காக நின்ற மகன் –பெற்ற தாயின் கொடூர செயல்!
பீகார் மாநிலத்தில் பெற்ற தாயே தனது குழந்தையை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா அடுத்த ஹசன்பூர் காண்டா பகுதியை சேர்ந்தவர் தர்மஷீலா தேவி. இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அருண் சவுத்ரி என்பவரோடு திருமணம் நடந்தது. அவர்களுக்கு சாஜன் குமார் என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை பிறவியிலேயே காது கேளாத வாய் பேச முடியாத குழந்தை.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்த தேவி, குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துகொள்ள அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அதையடுத்து முகேஷ் சவுத்ரி என்பவரைத் திருமணம் செய்துகொள்ள அவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் திருமணம் செய்துகொள்ள அவர் நினைக்கையில் அவரின் குழந்தை அவருக்கு தடையாக இருந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். சிறுவன் காணாமல் போனது குறித்து கிராமத்தாருக்கு சந்தேகம் வர போலிஸுக்கு தகவல் சொல்லியுள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில் தர்மஷீலா மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
