செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (19:32 IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து தாய்-மகள் பலி..

நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய்-மகள் பலியான சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா மற்றும் தெழுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. முக்கியமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பகுதியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அமுதா மற்றும் அவரது மகள் காவ்யா ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிழந்தனர். இதுவரை இந்த மழையால் கேரளாவில் மட்டும் 16 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.