ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (12:53 IST)

அவலாஞ்சியில் வரலாறு காணாத மழைப்பொழிவு: 91 செ.மீ உயர்ந்தது

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கனமழை பெய்து வருகிறது. நேற்றுவரை 82 செ,மீ மழை பதிவாகியிருந்தது. பல்வேறு பகுதிகளில் நிலசரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் விடாது பெய்து கொண்டிருக்கும் மழையால் இன்று 91 செ.மீ அளவுக்கு மழையளவு உயர்ந்திருக்கிறது. இதேநிலை நீடித்தால் நிலச்சரிவுகளும், வெள்ள அபாயமும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக மக்கள் அச்சப்படுகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு அதிகமான மழைப்பொழிவை சந்தித்திருக்கிறது நீலகிரி. 2009ஆம் ஆண்டு பெய்த மழை நீலகிரியையே புரட்டி போட்டது. நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் எண்ணற்ற துயரங்களுக்கு ஆளானார்கள். இந்த முறை அதைவிட அதிகமாகவே மழைப்பொழிவு இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஒருவார காலமாக இரவு,பகலாக ஓய்வில்லாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் மூன்று நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.