ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (13:08 IST)

நீலகிரியில் தொடர்மழை – அதிகமபட்சமாக அவலாஞ்சியில் 82 செ.மீ. !

நீலகிரியில் தொடர்மழை – அதிகமபட்சமாக அவலாஞ்சியில் 82 செ.மீ. !
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழைக் காரணமாக தொடர்ந்து 6 நாட்களாக மழைப் பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரவுபகலாக ஆறு நாட்களாக மழைப் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக மூன்று நாட்களாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 82 செ.மீட்டரும், அப்பர் பவானியில் 30 செ.மீட்டர் மழையும்  பெய்துள்ளது.

தொடர்மழையால் பார்சன்ஸ் வேலி மற்றும் ரேலியா அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழைக் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைந்துள்ளது.