1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (14:52 IST)

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து : 2 பேர் பலி,8 பேர் படுகாயம், 30 பேர் மாயம் என தகவல்

Myanmar
மியான்மர் நாட்டில்  சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில்  2 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்  நடைபெற்று வருகிறது. அங்குள்ள கச்சின் மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமான அந்தச் சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில். ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியானதாகவும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலச்சரியில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. இவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.