1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:50 IST)

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதிய விமானம்.. 10 பேர் பரிதாபமாக பலி..!

மலேசியாவில் திடீரென தரையிறக்க வேண்டிய நிலையில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் இறங்கியதை அடுத்து வாகனங்கள் மீது மோதியதால் பரிதாபமாக 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
 மலேசியாவை சேர்ந்த விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனை அடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றார்.
 
அப்போது அவர் தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கியதால் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விமானம் மோதி தீப்பிடித்து எரிந்தது
 
இந்த விபத்தில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து மலேசியா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிசியான சாலைகள் விமானம் திடீரென இறங்கியது அடுத்து வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva