இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு, நிலச்சரிவு! 60 பேர் பலி!
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை, யமுனை நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டுள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் இதுவரை நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நிலச்சரிவுகளில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் டேராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இமாச்சல பிரதேசத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத், கேதர்நாத் புனித தலங்கள் செல்லும் பாதைகள் நிலச்சரிவில் சேதமடைந்துள்ளதால் ஆன்மீக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K