செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (18:04 IST)

பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கை; முதல் நாளிலேயே இத்தனை ஆயிரம் பேர் விண்ணப்பமா?

இன்று முதல் பி.இ, பி.டெக் உள்பட பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆரம்பம் ஆகிறது என்றும் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே 
 
இதனை அடுத்து இன்று காலை முதல் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் பிஇ பிடெக் ஆகிய இரண்டு படிப்புகளில் மட்டும் சேர்வதற்கு 25,611 ஒருவர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது/ மேலும் இதில் 5,363  பேர்கள் சான்றிதழையும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல் நாளிலேயே பி.இ, பி.டெக்  படிப்பிற்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/ கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் நாளிலேயே அதிகமாக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.