செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (17:51 IST)

ஒலிம்பிக் வீராங்கனை மீராபாய்க்கு உயர்பதவி: அதிரடி அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற இந்தியாவின் மீராபாய் காவல்துறையில் உயர் பதவி அளிக்க மணிப்பூர் அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு என்பவர் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று டோக்கியோவில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த மீராபாய் சானுவை பலர் வரவேற்றனர். இந்த நிலையில் மணிப்பூர் அரசு சற்று முன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மீராபாய்க்கு காவல்துறையில் ஏஎஸ்பி பதவி வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கு அரசு வேலை தருவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதேபோல்தான் மணிப்பூரிலும் காவல்துறையில் உயர் பதவியை மீராபாய் சானு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது