வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (16:35 IST)

உன் கையப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும் ரஞ்சித் – உச்சிமுகர்ந்த மூத்த நடிகர்!

இயக்குனர் பா ரஞ்சித்தின் படத்தை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார் நடிகர் நாசர்.

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவராலும் பாராட்டப் படுகிறது. சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சக திரைக் கலைஞர்களையும் சார்பட்டா பரம்பரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பல கலைஞர்களும் டிவிட்டரில் பாராட்டி வரும் நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நாசர் ரஞ்சித்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘தம்பி ரஞ்சித் நான் உன்னை பாராட்ட மாட்டேன். உங்கையப் புடிச்சு ஒரு நூறு முத்தங்களைக் கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன். இப்படியொரு படம் எஞ்சமூகத்துக்கு கொடுத்ததுக்கு” எனப் பாரட்டியுள்ளார்.