1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (16:14 IST)

மற்றொருமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு

பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு எம்பி வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து அவரை பதவியில் இருந்து விளைவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிர்வாக பரிந்துரை செய்தது 

இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும்  பரிந்துரை அறிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மஹுவா மொய்த்ரா  தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியதை அடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

இதனை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘’எம்பி மஹுவா மொய்த்ரா பதவியை பறித்ததன் மூலம் மற்றொருமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு’’ என்று  எம்பி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் எதிர் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது எம் பி பதவியை பறித்ததன் மூலம் மற்றொருமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. வன்மையான கண்டனம்’’என்று தெரிவித்துள்ளார்.